புதுவை குரும்பாபட்டு கிராமத்தில் ரூபாய் 15 லட்சம் செலவில் கட்டப்பட்ட கலையரங்க கட்டிடத்தினை சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தன் அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
வில்லியனூர் கொம்யூன் அலுவலகம் மூலம் , சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ஊசுடு தொகுதி குரும்பாபட்டு கிராமத்தில் ரூபாய் 15 லட்சம் செலவில் கட்டப்பட்ட கலையரங்க கட்டிடத்தினை சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தன் அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் பாலமுருகன், குரும்பாபட்டு தொழில் முனைவோர் கூட்டமைப்பு தலைவர் சீனிவாசன் ,செயலாளர் மோகன், மற்றும் ஊர் பிரமுகர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். மற்றும் நலவாழ்வு சங்கத்தின் சார்பாக குடியரசு தினத்தன்று நடைபெற்ற மகளிருக்கான கோலப்போட்டி மற்றும் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் மற்றும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசும் தீப்பாய்ந்தன் எம்.எல்.ஏ. அவர்கள் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நலவாழ்வு சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

" alt="" aria-hidden="true" />

 

Popular posts
நில தரகர்களுக்கும் அமைப்பு சாரா தொழில் முறையில் நிவாரண உதவி வழங்க வேண்டும் - முதல்வருக்கு விருகை வி.என்.கண்ணன் கோரிக்கை
Image
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
Image
இராணுவ வீரர்களுக்கு சமமானவர்கள் மருத்துவர்கள் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்
Image
தூத்துக்குடி மாவட்ட அனைத்து அரசு பணியாளர்களுக்கிடையேயான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
Image