புதுவை புதின மலர் மாமணி விருது




புதின மலர் மாமணி விருது

 

சிறுகதை எழுத்தாளர் ராஜேஸ்வரிக்கு சென்னை சிவனேயபேரவை அவர் ஆற்றிவரும் இலக்கியப் பணிகளை பாராட்டி  புதின மலர் மாமணி விருது வழங்கி சிறப்பித்தது. மகளிர் தினத்தன்று நங்கநல்லூர் வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது.

 

திருத்தல வெண்பா ஈசநேசன் மகஸ்ரீயின் விளக்கவுரை நூல் வெளியிடப்பட்டது. திருவாசக பித்தர் தவத்திரு ஸ்ரீலஸ்ரீ வாதவூரடிகளார் கலந்து கொண்டு நூலினை வெளியிட்டார் . பல்வேறு தளங்களில் இலக்கிய பணியாற்றிய 25 மகளிருக்கு விருது வழங்கப்பட்டது. தினமணி துணை ஆசிரியர் இடைமருதூர் மஞ்சுளா, பாவையர் மலர் ஆசிரியர் குழந்தை இலக்கிய பேரவை தலைவர் வெங்கட்ராமன், புதுக்கோட்டை இலக்கிய பேரவை தலைவர் சொல்லருவி , முத்து சீனிவாசன் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். 

திருமதி வான்மதி மணிகண்டன் ஆகியோர் விருதுகளை வழங்கினார்கள்.  விருது பெற்ற 25 மகளிரில் புதுவை மூலக்குலத்தைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் ராஜேஸ்வரி புதின மலர் மாமணி விருது பெற்றார். பேரவை செயலர் சாமி கோவிந்தராஜன் நன்றி கூறினார்.

 ராஜேஸ்வரி எழுதிய டிஜிட்டல் மாசு கவிதைக்காக கடலூர் மாவட்ட பாரதிதாசன் நற்பணி மன்ற பரிசையும் ,  இலவசம் இனிக்குது சிறுகதைக்காக ராஜபாளையம் மணிமேகலை மன்ற முதல் பரிசையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

" alt="" aria-hidden="true" />