" alt="" aria-hidden="true" />
சென்னை
இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலதரகர்கள் நல சங்க அகில இந்திய தலைவர் விருகை வி.என்.கண்ணன் முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில்
புரட்சி தலைவி அம்மா வழியில் செயலாற்றி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நீங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறீர்கள்.
இந்த ஊரடங்கால் நிலத்தரகர் தொழில் செய்யும் பல லட்சம் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.ரியல் எஸ்டேட் தொழில் கடந்த சில வருடங்களாக மோசமான நிலையில் உள்ளதை தாங்கள் அறிவீர்கள்.தற்போதைய சூழ்நிலையில் இவர்கள் சாப்பாடு,வீடு வாடகை கூட கட்ட முடியாதே சூழ்நிலையில் தவித்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூபாய் 1000 உதவி தில்லை அறிவித்துள்ளீர்கள்.அமைப்பு சாரா தொழில் பட்டியலில் எங்களை போன்ற நிறைய தொழில்கள் அதில் சேர்க்கபடவில்லை.
எனவே நிலதரகர் தொழிலையும் அதில் சேர்த்து நிவாரண உதவி வழங்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.நிலத்தரகர்கள் நலசங்க அகில இந்திய தலைவர் விருகை வி.என்.கண்ணன் கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்றி தரும்படி மாநில செயலாளர் அ.பாலசுப்ரமணி,ஐடி.பிரிவு ராஜன் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்